Posts

Showing posts with the label #Training | #Provided | #Employment | #Guarantee

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் ஹெச்சிஎல் வழங்கும் ஓராண்டு பயிற்சி!

Image
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் ஹெச்சிஎல் வழங்கும் ஓராண்டு பயிற்சி! 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்துடன் 12 மாத பயிற்சி வகுப்பை ஹெச்சிஎல் நிறுவனம் வழங்குகிறது. இந்தப் பயிற்சியை முடித்தால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடக்கநிலை வேலைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. கணிதம் அல்லது பிசினஸ் மேக்ஸ் ஆகிய பாடங்களை பிரதானமாகக் கொண்டு 2021ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது மறு தேர்வு எழுத இருப்பவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முழுநேர பணி வாய்ப்புக்கு இந்தப் பயிற்சியில் உத்தரவாதம் தரப்படுகிறது. ‘டெக்பீ’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் பங்குபெறும் மாணவர்கள், பயிற்சி முடித்த ஹெச்சிஎல் நிறுவன புராஜக்டுகளில் இன்டர்ஷிப் செய்யும்போது மாதந்தோறும் ரூ.10,000 ஸ்டைபண்ட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   பயிற்சியை நிறைவு செய்த பிறகு, மென்பொருள் பொறியாளர், உள்கட்டுமான மேலாண்மை, டிசைன் இன்ஜினியர் அல்லது ...