ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கால அவகாசம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே!2113644057
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கால அவகாசம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே! ரேஷன் கார்டுகளில் மோசடிகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அதற்கான விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றது அரசு. அந்த வகையில் ரேஷன் கார்டில் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கும் கடைசி தேதியை அரசு தற்போது நீட்டித்துள்ளது. அதன்படி பயனாளிகள் ஜூன் 30ஆம் தேதி வரை தங்கள் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்க முடியும். கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அதற்குள் இணைத்து விடுங்கள். எப்படி இணைப்பது? ரேஷன் கார்டு ஆன்லைன் மூலம் ஆதாருடன் இணைப்பதற்கு முதலில் uidai.gov.in என்ற இணையத்தள பக்கத்திற்கு சென்று, start now என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களது முகவரி உள்ளிட்ட மற்ற விவரங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். அதன்பிறகு ration card benefit என்பதை கிளிக் செய்து உங்களுடைய ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை உள்ளிட வேண்டும். அதனைப் பூர்த்தி செய்த பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரு...