ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கால அவகாசம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே!2113644057


ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கால அவகாசம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே!


ரேஷன் கார்டுகளில் மோசடிகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அதற்கான விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றது அரசு. அந்த வகையில் ரேஷன் கார்டில் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கும் கடைசி தேதியை அரசு தற்போது நீட்டித்துள்ளது. அதன்படி பயனாளிகள் ஜூன் 30ஆம் தேதி வரை தங்கள் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்க முடியும். கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அதற்குள் இணைத்து விடுங்கள்.

எப்படி இணைப்பது?

ரேஷன் கார்டு ஆன்லைன் மூலம் ஆதாருடன் இணைப்பதற்கு முதலில் uidai.gov.in என்ற இணையத்தள பக்கத்திற்கு சென்று, start now என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களது முகவரி உள்ளிட்ட மற்ற விவரங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். அதன்பிறகு ration card benefit என்பதை கிளிக் செய்து உங்களுடைய ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை உள்ளிட வேண்டும். அதனைப் பூர்த்தி செய்த பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி- யை நிரப்ப வேண்டும். அதன் பிறகு உங்களது ஆதார் கார்டு ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டு விடும்.

ஆஃப்லைனில் எப்படி இணைப்பது?

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் அட்டை தாரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை ரேஷன் கார்டு மையத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். இதனைத் தவிர ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பு ரேஷன் கார்டு மையத்தில் செய்யப்படும்.

Comments

Popular posts from this blog

Best Places to Visit in Italy with Kids

Honey Sriracha Pork Chops