100 வேலைக்கு சென்ற பெண் நிர்வாணமாக மீட்பு… நெல்லையை அதிர வைத்த சம்பவம்!


100 வேலைக்கு சென்ற பெண் நிர்வாணமாக மீட்பு… நெல்லையை அதிர வைத்த சம்பவம்!


திருநெல்வேலி மாவட்டம்பாளையங்கோட்டைஅருகே உள்ளதிருமலைக்கொழுந்துபுரம்பகுதியை சேர்ந்தவர் 50 வயதுடைய பெண். ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் திட்டத்தில் வேலை செய்து வந்தார். மார்ச் 15-ம் ஆம் தேதி வேலைக்கு சென்ற பெண் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

உறவினர்கள் வீடுகளில் தேடிய பிறகு அவரது கணவர் பாளையங்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், மார்ச் 15(நேற்று) அதிகாலையில் ஊருக்கு அருகே காட்டுப்பகுதியில் அந்தப்பெண் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றினர். உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தென்காசியில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 26 பேர் படுகாயம்!


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த பெண்100 வேலைமுடிந்த பிறங்கு அங்குள்ள ஆற்றில் குளித்துவிட்டு தனியாக வீட்டிற்கு நடந்துச்சென்றுள்ளார். அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள், அதிகாரிகள் உங்களை பார்க்க வேண்டும் என்று கூறி அழைத்துள்ளனர்.

அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே, போதை கும்பல் பெண்ணின் கையில் இருந்த துணி மற்றும் வாளியை அங்கேயே தூக்கி போட்டுவிட்டு பெண்ணை முட்புதருக்குள் இழுத்துச்சென்று ஆடைகளை கலைந்து நிர்வாணமாக்கி அதே ஆடையால் கை, கால்களை கட்டியுள்ளது. பின்னர் கழுத்தை நெரிக்கப்பட்டு அந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரி விடுமுறை… பறந்து வந்த உத்தரவால் மாணவர்கள் ஹேப்பி!

மருத்துவ அறிக்கை வெளியான பிறகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டரா என்பது தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர். மேலும், போதை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

Best Places to Visit in Italy with Kids

Honey Sriracha Pork Chops