மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை


மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை


சென்னை: மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது எனவும் ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.

போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும். பணிக்கு வருகை தரவில்லை எனில் ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 28, 29ல் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ள நிலையில், ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது என்றும் ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து எனவும் மதுரை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல் உள்ளிட்ட தொழிலாளர் நல விரோத அரசாக இருக்கும் மத்திய பாஜக அரசிற்கு தங்களது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் அகில இந்திய பொது வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்ட்டுள்ள நிலையில், போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments

Popular posts from this blog

Best Places to Visit in Italy with Kids

Honey Sriracha Pork Chops