AK62 அறிவிப்பு...விமர்சிக்கும் ரசிகர்கள்..! ஏன் தெரியுமா ?


AK62 அறிவிப்பு...விமர்சிக்கும் ரசிகர்கள்..! ஏன் தெரியுமா ?


அஜித்நடிப்பில் சமீபத்தில் வெளியானவலிமைபடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளது. மூன்று வருடம் கழித்து அஜித்தின் படம் திரையில் வெளியாவதால் வலிமை படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது.

என்னதான் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களின் எதிர்பார்ப்பை வலிமை படம் பூர்த்திசெய்யவில்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. இதையடுத்து இதே கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணையவுள்ளது.

விஜய் அரசியலுக்கு வருவாரா ? விஜய் தரப்பு அளித்த விளக்கம் இதோ..!

AK61 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஒரு வாரத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பே இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் தற்போது அஜித்தின் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கி அடுத்தாண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தினாலும் சில விமர்சனங்களும் எழுந்துள்ளது. அதாவது பொதுவாக லைக்கா நிறுவனம் படத்திற்கான விளம்பரங்களை அவ்வளவாக செய்யமாட்டார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித் - விக்னேஷ் சிவன் படம்

அஜித் - விக்னேஷ் சிவன் படம்

சமீபத்தில் வலிமை படத்திற்காக ப்ரோமோஷன்களில் அசத்தினார் போனி கபூர். ஆனால் அந்த அளவிற்கு லைக்கா ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபடமாட்டார்கள் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். எனவே அஜித் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை விரும்பமாட்டார் என்பதால் லைக்கா நிறுவனத்திற்கு வசதியாக போய்விடும் என சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் லைக்கா நிறுவனம் அவ்வளவு எளிதில் அப்டேட் விடமாட்டார்கள் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தெய்வம் தல.. AK - வ பாத்தா போதும்...இது இதுதான் எங்களுக்கு தீபாவளி!

Comments

Popular posts from this blog

Hot Chocolate Dessert Charcuterie Board #CharcuterieBoard

57 Pretty Nail Ideas The Nail Art Everyone s Loving ndash Cute Daisy #Ndash

Family Road Trip Packing List 9 Essentials for a Successful Trip