பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒன்டே: ஆஸ்திரேலியா அபார வெற்றி

லாகூர்: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் லாகூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்தமுதல் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 313 ரன் குவித்தது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 101 ரன் (72பந்து), மெக்டெர்மாட் 55ரன் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் 45.2 ஓவரில் 225 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 88 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் இமாம் உல்ஹக் 103, கேப்டன் பாபர் அசாம் 57 ரன் எடுத்தனர். ஆஸி.பந்து வீச்சில் ஆடம் ஜம்பா4 விக்கெட் எடுத்தார். ஹெட் ஆட்டநாயகன் விருது பெற்றார்....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment