அதிக விலை காரணமாக ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை கடும் சரிவு
இந்தியாவில் ஏப்ரல் மாதத்தின் முதல் 2 வாரங்களில் பெட்ரோல் விலை 10 சதவீதமும், டீசல் விற்பனை 15 சதவீதமும் சரிவை கண்டுள்ளது. எரிபொருட்களின் விலை அதிகரித்ததால் அவற்றின் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்தியாவில் 137 நாட்களுக்கு எரிபொருள் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் 5 மாநில தேர்தல் முடிந்ததை தொடர்ந்து மார்ச் 22ம் தேதி மீண்டும் விலை ஏற்றப்பட்டது. மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதிவரையிலான காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. காஸ் சிலிண்டர் விலையும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment