ஆர்யாவை இழுக்கும் ஜோம்பி கைகள்... பர்ஸ்ட் லுக்கே மிரட்டலா இருக்கே!


ஆர்யாவை இழுக்கும் ஜோம்பி கைகள்... பர்ஸ்ட் லுக்கே மிரட்டலா இருக்கே!


தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் ஆர்யா. டெடி, சர்பட்டா பரம்பரை, எனிமி என இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் இவருக்கு சிறப்பான பெயரையும் பெற்றுத் தந்து வசூலையும் வாரிக் குவித்தது.

இதையடுத்து தற்போது டெடி பட இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் தற்போது கேப்டன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஆர்யா. இந்தப் படமும் சயின்ஸ் பிக்ஷனாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

இதையடுத்து தற்போது நலன் குமாரசாமி இயக்கத்திலும் ஆர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வெப் தொடர் ஒன்றிலும் ஆர்யா நடித்து வருகிறார். அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ள இந்த தொடருக்கு தி வில்லேஜ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழில் அவள் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த தொடரில் திவ்யா பிள்ளை ஆர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார். ஆலியா, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துக்குமார் உள்ளிட்டவர்களும் இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்தியாவிலும் வெப் தொடர்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. இதையொட்டி அமேசான் ப்ரைம் பல வெப் தொடர்களை தயாரித்து வருகிறது. தங்களது தயாரிப்பில் உருவாகிவரும் வெப் தொடர்களை தற்போது பிரம்மாண்டமான விழா மூலம் அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த விழாவில் ஆர்யாவின் தி வில்லேஜ் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

 ஜோம்பிக்களிடம் தப்பிக்கும் ஆர்யா

த்ரில்லர் வகையில் உருவாகி வரும் இந்த தொடரின் பர்ஸ்ட் லுக்கில் ஆர்யா ஜோம்பிக்களிடம் இருந்து தப்பிக்கும் வகையில் காணப்படுகிறார். அவரது முன்பு அரிவாள் காணப்படுகிறது. இந்த போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

Comments

Popular posts from this blog

Best Places to Visit in Italy with Kids

Honey Sriracha Pork Chops