2வது கணவனை கழட்டிவிட முதல் கணவரின் மகனை திருமணம் செய்த பெண்: அதிர்ச்சி தகவல்


2வது கணவனை கழட்டிவிட முதல் கணவரின் மகனை திருமணம் செய்த பெண்: அதிர்ச்சி தகவல்


இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை கழட்டி விடுவதற்காக முதல் கணவரின் மகனை திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாப்லி என்ற பெண்ணுக்கு அவருடைய உறவினருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில் கணவரை விவாகரத்து செய்து விட்டு வேறொருவரை பாப்லி திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது கணவருடன் கடந்த பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பாப்லிக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிய முடிவு செய்த பாப்லி, முதல் கணவருக்கு பிறந்த மகனையே திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமின்றி வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டதாக தெரிகிறது.

இது குறித்து பாப்லியின் இரண்டாவது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து, தலைமறைவாக உள்ள பாப்லி மற்றும் அவரது மகனும் கணவருமான இளைஞரையும் தேடி வருகின்றனர்.

ஒரு பெண் இரண்டாவது கணவரையும் பழிவாங்க முதல் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

Best Places to Visit in Italy with Kids

Honey Sriracha Pork Chops