துப்பாக்கி 2 படத்தை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டும் பிரபல தயாரிப்பு நிறுவனம் – இயக்குனர் முருகதாஸ் கிடையாது.?


துப்பாக்கி 2 படத்தை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டும் பிரபல தயாரிப்பு நிறுவனம் – இயக்குனர் முருகதாஸ் கிடையாது.?


தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வருபவர்  நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் அடுத்த படம் மிரட்டலாக இருக்க தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கை கோர்த்து தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் துப்பாக்கி இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர் அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனம்  விஜய்யை வைத்து துப்பாக்கி 2 படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளதாம். ஆனால் இயக்குனர் முருகதாஸ் கிடையாதாம் அவருக்கு பதிலாக இந்தப் படத்தை எடுக்க லோகேஷ், அட்லீ அல்லது வினோத் இந்த மூவரில் எவரேனும் ஒருவர் துப்பாக்கி 2 படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை இயக்க அதிகம் ஆர்வம் காட்டும் அந்த தயாரிப்பு நிறுவனம் வேறு எதுவுமல்ல சன் பிக்சர்ஸ் நிறுவனம் என கூறப்படுகிறது வெகுவிரைவிலேயே விஜய்யை வைத்து துப்பாக்கி 2 படம் மிக பிரமாண்டமாக கொடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

விஜய் சும்மாவே மாஸ் காட்டுவார் தற்போது துப்பாக்கி படத்தின் இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டால் விஜய்யின் நடிப்பு அதிக அளவில் இருக்கும் என ரசிகர்கள் தற்போது கணக்கு போட தொடங்கி உள்ளனர்.

Comments

Popular posts from this blog

Hot Chocolate Dessert Charcuterie Board #CharcuterieBoard

The 22 Best Hyaluronic Acid Serums for Your Skin #Skin

How to Soundproof Your Windows Without Actually Renovating #Actually