அந்த 30 நிமிடம்... ‘டான்’ படம் பார்த்துக் கண்ணீர்விட்ட ரஜினிகாந்த்!


அந்த 30 நிமிடம்... ‘டான்’ படம் பார்த்துக் கண்ணீர்விட்ட ரஜினிகாந்த்!


அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியானது.

டாக்டர் இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் சிவகார்த்திகேயனின் கரியரில் அதிக வசூல் செய்த படம் எனும் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டுகளித்ததுடன் சிவகார்த்திகேயனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியும் உள்ளாராம். நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

                                               

சிறப்பாக நடித்துள்ளதாக சிவகார்த்திகேயனைப் பாராட்டியுள்ள ரஜினி, படத்தின் கடைசி அரை மணி நேரக் காட்சியைக் கண்டு தன்னால் கண்ணீரை அடக்கமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளாராம். அத்துடன் படத்தின் இயக்குநரையும் ரஜினி பாராட்டியுள்ளாராம். டான் படம் தொடர்பாக பலரும் பாராட்டியதாகத் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன் அதில் ரஜினியின் பாராட்டு கூடுதல் முக்கியத்துவமானது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ராம் சரணுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்? - விஜய் படம் கைவிடப்படுகிறதா?!

சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகர் எனும் விஷயம் ஊரறிந்தது. அதேபோல இப்படத்தின் இயக்குநரான சிபி சக்கரவர்த்தியும் ரஜினி ரசிகராம். இவர்கள் காம்போவில் உருவாகியுள்ள இந்த டான் படத்திலும் பாடல்கள்,  காட்சிகள் என சுமார் 8 இடங்களில் ரஜினி தொடர்பான சீன்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்தின் கதை இதுதானா? அதிலும் இப்படி ஒரு சர்ப்ரைஸா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog

Hot Chocolate Dessert Charcuterie Board #CharcuterieBoard

The 22 Best Hyaluronic Acid Serums for Your Skin #Skin

How to Soundproof Your Windows Without Actually Renovating #Actually