கோபியின் சுயரூபத்தை வெளிப்படுத்த கதிர் செய்யும் செயல்.! வைரலாகும் ப்ரோமோ


கோபியின் சுயரூபத்தை வெளிப்படுத்த கதிர் செய்யும் செயல்.! வைரலாகும் ப்ரோமோ


விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் நாடகங்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மகா சங்கமமாக இரவு 8 மணி அளவில் ஒளிபரப்பப்படுகிறது.

இந்த இரு நாடகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் ஒவ்வொன்றின் கதையும் மக்களை வெகுவாக கவரக் கூடியதாக அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான இந்த நாடகத்தின் குறுகிய அளவிலான வீடியோவில் கோபி செய்யக்கூடாத ஒரு விஷயத்தை வாய்விட்டு சொல்லும் ஒரு காட்சி வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் கோபியின் நண்பர் அவருக்கு கால் செய்து நீ ராதிகாவிடம் நீதான் பாக்யாவின் கணவர் என்ற உண்மையைக் கூறிவிடு என்று கூறுகிறார் ஆனால் அதற்கு கோபி என்னால் ராதிகாவை பிரிய இயலாது அவள் எனக்கு வேண்டும் என்று கூறுகிறார் அதற்கு அவரது நண்பர் அப்பொழுது நீ கண்டிப்பாக நாளை நடக்கப்போகும் பிறந்தநாள் விழாவில் குடும்பத்தின் முன் அசிங்கப்படுவாய் என்று கூறுகிறார்.

அதற்கு கோபி கோபத்துடன் அது எப்படி நிகழும், இந்த பிறந்தநாள் விழா எப்படி நடக்கும் இந்த விழா கண்டிப்பாக நடக்காது என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் கதிர் ஓரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார், மேலும் கோபியின் நண்பர் அது எவ்வாறு நடக்கும் அனைத்து சொந்தங்களும் வீட்டில் ஒன்று கூடி விட்டனர் எப்படி இதை நிறுத்துவாய்? என்று கேட்கிறார்.

கதிர் தனது பின்னால் நிற்பது கூட தெரியாமல் கோபி வேகமாக அவரது காதில் விழும்படி எப்படி இருந்தாலும் இந்த பிறந்தநாள் விழாவை நடக்க விடமாட்டேன் கண்டிப்பாக தடுத்து நிறுத்துவேன் என்று கூறிக்கொண்டே ஒரு பக்கமாக திரும்ப கதிரைப் பார்த்து பயத்தில் உலற தொடங்குகிறார் கோபி.இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Comments

Popular posts from this blog

Best Places to Visit in Italy with Kids

Honey Sriracha Pork Chops