விஜய் டிவி பிரபலத்துக்காக அழுத புகழ்


விஜய் டிவி பிரபலத்துக்காக அழுத புகழ்


விஜய் டிவியின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேல் பாலாஜி. ‘கலக்கப் போவது யாரு’, ‘அது இது எது’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் மக்களின் மனதைக் கவர்ந்த அவரின் திடீர் மறைவு சின்னத்திரை மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் வடிவேல் பாலாஜி மறைந்தபோது அவரின் வீட்டில் குவிந்தனர். அவருக்காக விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, குடும்பத்துக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. 

மேலும் படிக்க | மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் தற்கொலை - வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்

அவர் இறந்து 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வடிவேல் பாலாஜியின் நினைவுகளை அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் பகிர்ந்து வருகின்றனர். விஜய் டிவியின் புகழும், வடிவேல் பாலாஜியின் நினைவுகளை பகிர்ந்துள்ளார். வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்துள்ள புகழ், " மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா. வாய்ப்பு தேடி வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தீர்கள். உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். 

பலவற்றை எனக்கு கற்று கொடுத்தீர்கள். மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைப்பதே கடமை என வாழ்ந்த நீங்கள், இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள். நினைவில் இருந்து என்றும் நீங்காது உங்கள் முகம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா மிஸ் யூ மாமா ” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். புகழ் இப்போது பெரும் புகழை அடைந்திருந்தாலும், அவரை தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றவர் வடிவேல் பாலாஜி தானாம். இதனால், ஒவ்வொரு பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் தவறாமல் பாலாஜியை நினைவு கூர்ந்துவிடுகிறார் புகழ். 

மேலும் படிக்க | கடல் அலையில் பாறை மீது தவறி விழுந்த டிடி அக்கா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog

Hot Chocolate Dessert Charcuterie Board #CharcuterieBoard

57 Pretty Nail Ideas The Nail Art Everyone s Loving ndash Cute Daisy #Ndash

Family Road Trip Packing List 9 Essentials for a Successful Trip