ராசியே இல்லாதவரா நீங்கள்? இதை தொடந்து செய்யங்கள் தொட்டதெல்லாம் ராசி தான்!193299335


ராசியே இல்லாதவரா நீங்கள்? இதை தொடந்து செய்யங்கள் தொட்டதெல்லாம் ராசி தான்!


ஒரு சிலரை நாம் கைராசியானவர் என்று சொல்வது உண்டு. அவர் தொட்டதெல்லாம் எப்பொழுதும் தோல்வி அடைந்ததில்லை என்பதால் அவ்வாறு கூறப்படுவது உண்டு. தொழில் ரீதியாக சிலரை கைராசியானவர் என்று கூறுவோம். நல்ல மருத்துவம் பார்க்கும் மருத்துவரை இப்படி கூறுவது உண்டு. அது போல குடும்பத்திலும் சிலர் ராசியாக கருதப்படுவது உண்டு. அவர் கைகளால் எதை செய்தாலும் அது வெற்றியாகும். அவரால் மண்ணும் பொன்னாகும் என்கிற நம்பிக்கை இருப்பது உண்டு. அது போல ஒருவர் கைராசியானவராக மாறுவதற்கு அவர் செய்யும் இந்த ஒரு விஷயமும் காரணமாக இருக்கலாம்.

குறிப்பாக பெண்கள் செய்யும் இந்த ஒரு விஷயமும் இதற்குள் அடங்கி இருக்கலாம். பாற்கடலில் வீற்றிருக்கும் மகாலட்சுமி ஆனவர் இந்த ஒரு பொருளில் நீக்கமற நிறைந்து காணப்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துவதால் கைராசி ஆனவராக நாம் ஆகலாம் என்கிறது ஆன்மீகம்! அப்படியான ஒரு விஷயம் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முந்தைய காலங்களில் எல்லாம் தமிழர்கள் அனைவரின் வீட்டிலும் உப்பிற்கு என தனி மரியாதை கொடுக்கப்பட்டது உண்டு. தூள் உப்பை பயன்படுத்தவே மாட்டார்கள். கல் உப்பை பயன்படுத்துவது தான் நல்லது என்பதால் கல் உப்பை அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். அது மட்டும் அல்லாமல் தூள் உப்பு தேவைப்பட்டாலும், கல் உப்பை லேசாக வாணலியில் போட்டு வறுத்து உரலில் இட்டு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்வார்கள்.

உப்பின் மகிமையை அப்போதே உணர்ந்தவர்கள் இல்லத்தில் எப்பொழுதும் கைராசி தான்! இப்போது இருக்கும் நவீன பெண்கள் என்னதான் சமையல் செய்தாலும் இந்த பெயரை வாங்கி விட முடியாது. ஆனால் அக்காலத்தில் இருந்து சமையல் செய்யும் பெண்கள் பெரும்பாலானோரை இன்றும் கைராசியானவர், இவர் கை பட்டால் எல்லாமே நல்லதாகவே நடக்கும் என்று கூறப்படுவது உண்டு. அவர்கள் ஒரு செடி வைத்தாலும் அது செழிப்பாக வளரும். அவர்கள் சமையல் செய்தால் உப்பு, காரம் எதுவும் கூடவோ, குறையவோ இருக்காது. தராசு முள் நேராக நிற்பது போல அவ்வளவு சரியாக இருக்கும்.

இதற்கெல்லாம் காரணம் அவர்கள் கல் உப்பை பயன்படுத்தி வந்தது தான். கல் உப்பை பெரிய ஜாடிகளில் வைத்திருப்பார்கள். இப்போது இருக்கும் சிறிய சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைப்பது அவ்வளவு நல்லது அல்ல! பீங்கான் ஜாடி அல்லது மண் குடுவையில் போட்டு வைக்க வேண்டும். பீங்கான் ஜாடி ஓரளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும். மூன்று கிலோ அளவிற்கு உப்பு பிடிக்குமாறு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அதிலிருந்து கைகளால் எடுத்து உப்பை சமையலில் சரியாக சேர்த்து சமைத்தால் சமையலும் ருசிக்கும், கை பக்குவமும் வரும். கைராசியும் உண்டாகும் என்பது நியதி! கல் உப்பை அதிக அளவு பயன்படுத்தி வேறு வழி இல்லாத சமயங்களில் மட்டும் தூள் உப்பை பயன்படுத்துங்கள். அதிலும் இந்துப்பு பயன்படுத்துவது ரொம்பவே ஆரோக்கியமானது. காலையில் எழுந்ததும் நீங்கள் பல் துலக்கி, முகம் எல்லாம் கழுவி சமைக்க ஆரம்பிக்கும் முன்னர் உப்பு ஜாடிக்கு அருகில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சமைக்க ஆரம்பியுங்கள். இதனால் அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். தனமும், தானியங்களும் பஞ்சம் இல்லாமல் கிடைக்கும். இதனால் வறுமை இன்றி செல்வ செழிப்பு உண்டாகும்.

Comments

Popular posts from this blog