நூல் பண்டல் ரூ.17 ஆயிரமாக அதிகரிப்பு ஜவுளி உற்பத்தி 30% சரிவு: விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
நூல் பண்டல் ரூ.17 ஆயிரமாக அதிகரிப்பு ஜவுளி உற்பத்தி 30% சரிவு: விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல் சேலம்: நூல் விலை ஏற்றம் காரணமாக, ஜவுளி உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கைத்தறி சேலை, வேட்டிகளும், போர்வை, டவல் உள்ளிட்டவையும், விசைத்தறியில் ஏற்றுமதி ரகங்களும், டவல், கேரளா வேட்டி, சேலை, காட்டன் வேட்டி, அபூர்வா சேலை ரகங்கள், லுங்கி உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யும் ரகங்களில் ஏற்றுமதி ரகத்தை விட, மற்ற ஜவுளி வகைகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதமாக நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ....
Comments
Post a Comment