ஆர்யாவை இழுக்கும் ஜோம்பி கைகள்... பர்ஸ்ட் லுக்கே மிரட்டலா இருக்கே!
ஆர்யாவை இழுக்கும் ஜோம்பி கைகள்... பர்ஸ்ட் லுக்கே மிரட்டலா இருக்கே! தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் ஆர்யா. டெடி, சர்பட்டா பரம்பரை, எனிமி என இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் இவருக்கு சிறப்பான பெயரையும் பெற்றுத் தந்து வசூலையும் வாரிக் குவித்தது. இதையடுத்து தற்போது டெடி பட இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் தற்போது கேப்டன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஆர்யா. இந்தப் படமும் சயின்ஸ் பிக்ஷனாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதையடுத்து தற்போது நலன் குமாரசாமி இயக்கத்திலும் ஆர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வெப் தொடர் ஒன்றிலும் ஆர்யா நடித்து வருகிறார். அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ள இந்த தொடருக்கு தி வில்லேஜ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் அவள் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களை...